திருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்பிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்

Report Print Arbin Arbin in தெற்காசியா

திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, விஷம் அளித்து கொலை செய்து வந்த நபர் ஒருவர் மேலும் ஒரு வழக்கில் சிக்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொலிஸ் வட்டாரத்தில் சயனைடு மோகன்(56) என அறியப்படும் குறித்த நபர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பண்டியாள் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவரை கொலை செய்த வழக்கிலேயெ மோகன் தற்போது குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் மோகன் குமார் என்ற சயனைடு மோகன். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம் பெண்களை ஹொட்டல் அறைக்கு வரவழைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, சயனைடு அளித்து கொலை செய்வதை மோகன் வழக்கமாக கொண்டுள்ளார்.

மட்டுமின்றி அவர்களின் நகைகளையும் கைப்பற்றிவிட்டு மாயமாகி வந்துள்ளார்.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள சுமார் 20 இளம் பெண்களை இவர் சயனைடு மூலம் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை இவர் 15 வழக்குகளில் மரண தண்டனை உள்ளிட்ட தீர்ப்புகளை பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் உள்ள உப்பார்பேட் அரசு பேருந்து நிலையத்தில் உள்ள ஓய்வறையில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

விசாரணையில் அவரது மரண காரணம் சயனைடு விஷம் என தெரியவந்தது. இதனையடுத்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் முடிவுக்கு வந்தனர்.

ஆனால் 2010 ஆம் ஆண்டு இதே போன்றதொரு வழக்கில் மோகன் கைதானதும், பேருந்து நிலைய ஓய்வறையில் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் கொல்லப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து அவர்களுடன் ஹொட்டலில் உல்லாசமாக இருந்துவிட்டு, பின்னர் கர்ப்பமாகால் இருக்க மருந்து என சயனைடு விஷத்தை அளித்து வந்துள்ளது விசாரணையில் அம்பலமானது.

தற்போது இந்த வழக்கில் செப்டம்பர் 25 ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்