காத்திருக்கும் 500 தீவிரவாதிகள்.. மீண்டும் பாகிஸ்தான் சூழ்ச்சி: இந்திய ராணுவ தளபதி பரபரப்பு தகவல்

Report Print Basu in தெற்காசியா

இந்தியாவால் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பாலகோட் பயங்கரவாத ஏவுதளம் பாகிஸ்தானால் மீண்டும் செயல்பட்டு வருவதாக இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி Bipin Rawat கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த Bipin Rawat கூறுகையில், சுமார் 500 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும், தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ வைக்கவே பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், போர் நிறுத்த ஒப்பந்த மீறலை எப்படி அணுக வேண்டும் என எங்களுக்கு தெரியும், தங்களை பாதுகாத்துக்கொண்டு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என எங்கள் படைக்கு நன்றாகவே தெரியும்.

நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம், அதேசமயம் ஊடுருவலை தடுப்போம் என உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த Bipin Rawat, நாம் என் அதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்? அதையும் மீறி ஏன் செல்லக்கூடாது? அவர்கள் யூகிக்க வைத்துக்கொண்டிருக்கலாம் என கூறினார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்