கணவருக்காக தனியாக காத்திருந்த மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்... சிசிடிவில் பதிவான காட்சிகள்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கணவருக்காக காத்திருந்தபடி காரில் உட்கார்ந்திருந்த பெண்ணை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் உஷா ஷானி. இவர் நேற்று முன்தினம் காலை 6.30 மணியளில் கணவருக்கு டயாலிஸில் செய்வதற்காக அவருடன் காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் இருந்த கோவிலில் இறங்கிய உஷாவின் கணவர் உள்ளே சென்ற நிலையில் காரில் உட்கார்ந்தபடியே கணவருக்காக உஷா காத்திருந்தார்.

அப்போது பைக்கில் அங்கு வந்த கும்பல் உஷாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியது.

பின்னர் அங்கு வந்த உஷாவின் கணவர், மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஆனால் உஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உஷாவை மர்மநபர்கள் சுட்டது அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இதை ஆதாரமாக வைத்து பொலிசார் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் பகையின் காரணமாக இந்த சம்பவம் நடத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்