வெளிநாட்டில் வேலை வாங்கித் தந்து கூடவே வைத்திருந்த நண்பன்... இளைஞர் செய்த துரோகம்: மனைவி தந்த தண்டனை

Report Print Arbin Arbin in தெற்காசியா

வெளிநாட்டில் வேலை வாங்கித் தந்து உதவிய நண்பரின் மனைவியை மயக்கி, தகாத உறவில் ஈடுபட்ட நபருக்கு, அவரது மனைவி அளித்த தண்டனை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் கபீர் அஹமத் மற்றும் இர்ஃபான் அஹமத்.

இதில் கபீர் அஹமத் கட்டார் நாட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் இர்ஃபானுக்கு திருமணமாகியுள்ளது. வேலை ஏதும் இல்லாமல் அல்லல்பட்டு வந்த இர்ஃபான், சில மாதங்களுக்கு முன்னர் நண்பரான கபீர் அஹமதுவிடம் தமது நிலையை கூறி வேலை வாங்கித் தர கேட்டுள்ளார்.

அதற்கு சம்மதித்த கபீர், நண்பரான இர்ஃபானை கட்டாரில் உள்ள தமது குடியிருப்பிலேயே தங்க வைத்து நண்பருக்காக வேலை தேடி வந்துள்ளார்.

இந்த நிலையில், கபீர் குடியிருப்பில் இல்லாத நேரம் பார்த்து இர்ஃபான் அவரது மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி, தகாத உறவுக்கு உட்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த கபீர், தமது குடும்பத்துடன் இர்ஃபானையும் அழைத்துக் கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

நண்பனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த இர்ஃபான், விமான நிலையத்தில் வைத்தே மாயமாகியுள்ளார்.

இதனிடையே கபீர் அஹமது, இர்ஃபான் வீட்டுக்கு சென்று கட்டார் நாட்டில் நடந்த சம்பவத்தை அவரது மனைவியிடமும், ஊரில் உள்ள முக்கியஸ்தர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த தகவல் அறியாத இர்ஃபான் கடந்த ஆகஸ்டு 2 ஆம் திகதி வாணியம்பாடியில் உள்ள தமது குடியிருப்புக்கு திரும்பிய அவரை உறவினர்கள் கபீரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அங்குள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று இர்ஃபானை அவரது மனைவி கையால் செருப்பால் அடிக்க வைத்துள்ளனர்.

மட்டுமின்றி, அதை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த இர்ஃபான் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் புகார் அளித்து நடவ்டிக்கை எடுக்க கோரியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்