பாகிஸ்தான் அணியில் விளையாடும் விராட் கோஹ்லி.. சூசகமாக இணையத்தில் வெளியான வீடியோ

Report Print Basu in தெற்காசியா

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, தங்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதைப் போல் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செப்டம்பர் 6ம் திகதி பாகிஸ்தானின் பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் வகையில் வெளியிட்டப்பட்ட வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது, மேலும் இது இணையத்தை பிளவுவை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான போருக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றிக்கு பின்னர், விராட் கோஹ்லி பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் வீரராக மாறி விளையாடுவது போல் வீடியோ உள்ளது.

வினோதமான வீடியோவை பாகிஸ்தான் பத்திரிகையாளர் நைலா இனாயத் பதிவிட்டார், அதில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஸ்ரீநகரில் விளையாடுகிறது, விராட் கோஹ்லி பாகிஸ்தானுக்காக விளையாடுகிறார். சில வழக்கமான பிரமைகள், வேறு ஒன்றும் இல்லை என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

2025ம் ஆண்டில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ ஸ்ரீநகர் கிரிக்கெட் மைதானத்தில் டி-20 உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியின் காட்சியுடன் தொடங்குகிறது.

அதன் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர் பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டியை அறிவிக்கிறார். பின்னர் அவர் பாகிஸ்தானுக்கான இரண்டு தொடக்க வீரர்களை அறிமுகப்படுத்துகிறார், இரண்டு புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் பாபர் அசாம் மற்றும் விராட் கோஹ்லி என அறிவிக்கிறார்.

பின்னர் காட்சி ஒரு வீட்டிற்கு மாறுகிறது, அங்கு ரசிகர்கள் போட்டியைப் பார்க்கிறார்கள். அப்போது ஒரு சிறுமி தன் அப்பாவிடம், விராட் கோஹ்லி இன்று இந்த போட்டியில் நமது அணியை வெற்றிப்பெற செய்வார், நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள் என்று கூறுகிறார்.

அதற்கு அவரது அப்பா, விராட் கோஹ்லி இந்திய அணியில் இருந்தார் என்று பதிலளித்தார். இந்தியா யார்? என்று ஆச்சரியமான தோற்றத்துடன் சிறுவன் பதிலளிக்கின்றனர். அதற்கு அப்பா ஒரு புன்னகையுடன் பதிலளிக்கிறார்.

குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் இரு நாட்டு ரசிகர்களிடையே ஒரு கருத்து மோதலை தூண்டியுள்ளது

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்