இந்தியாவில் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்ற மனைவியின் ஆசையை, கணவர் தன்னுடைய ஓய்வு நாளில் நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்த் மீனா. ஆசிரியரான இவர் நேற்று ஓய்வு பெற்றார்.
இதையடுத்து அவர், ஜெய்ப்பூரில் இருந்து தனது சொந்த கிராமமான மலவாலி கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்தார்.
இதற்காக தனியார் ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தினார். அதில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஏறினார்.
ஹெலிக்பாடரில் ஏறிய அடுத்த18 நிமிடத்திலேயே தனது கிராமத்துக்கு வந்துவிட்டார் .
ஏன் இந்த திடீர் ஏற்பாடு? என்று ரமேஷ் சந்திடம் கேட்ட போது, ஒரு நாள், ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்றால் எவ்வளவு ஆகும் என்று என் மனைவி கேட்டார்.
அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன் படி ஜெய்ப்பூர்ல இருந்து எங்க கிராமத்துக்குப் போக 3.70 லட்சம் ரூபாய் ஆகும் என்று சொன்னார்கள். அதன் பின் பணத்தை கொடுத்தேன்.
இது தொடர் பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிச்சு அனுமதி வாங்கினேன். 18 நிமிஷம் பறந்து ஊருக்கு வந்தோம். எங்க ரெண்டு பேருக்குமே இது புது அனுபவமா இருந்தது, இதை விட என்ன மகிழ்ச்சி வேண்டும் என்று கூறி முடித்தார்.
இவர்கள் ஹெலிகாப்டரில் வருவதைப் பார்க்க அந்த கிராமத்தினர் ஏராளமாக கூடியிருந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.