மின் இணைப்பு துண்டிக்கப்படும்..! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வந்த சோதனை

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்தின் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இஸ்லாமாபாத் மின் வினியோக வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமரான பிறகு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆனால், தற்போது அவரது பிரதமர் அலுவலகத்திற்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இம்ரான்கான் இருக்கும் அலுவலகத்தின் மின்சார பாக்கி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமாபாத் மின் விநியோக வாரியம் நோட்டீஸ் ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது.

அதில், ‘பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சார கட்டண பாக்கியை வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய ரூ.35 லட்சம் கட்டணத்தையும் செலுத்தவில்லை. தற்போது லட்சக்கணக்கில் மின்கட்டணம் நிலுவையில் இருக்கிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பல முறை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பதில் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து 2 மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் எனும் சட்டம் அமலில் உள்ளது.

எனவே, கட்டணத்தை விரைவில் செலுத்தவில்லை என்றால் பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காஷ்மீர் பிரச்சனை, கிரிக்கெட் அணி கட்டமைப்பு என பல பிரச்னைகளுக்கு இம்ரான்கான் தீர்வு காண முயற்சித்து வரும் வேளையில், இந்த நோட்டீஸ் அவருக்கு தலைவலியாக உள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers