மனைவியை பழிவாங்க அவரின் ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்ட கணவன்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் விவாகரத்து செய்த முன்னாள் மனைவியுடன் தான் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சதீஷ் (27). தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியாக பணியாற்றுகிறார்.

இவர் நமிதா என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து சதீஷ் இரண்டாவதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் முதல் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த சதீஷ் அவரை பழிவாங்க நினைத்தார்.

அதன்படி நமிதாவுடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் போலி கணக்கை தொடங்கி அதில் வெளியிட்டார்.

இதோடு நமிதா தனியாக இருக்கும் ஆபாச புகைப்படங்களையும் வெளியிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நமிதா தனது முன்னாள் கணவர் தான் இதை செய்தார் என்பதை அறியாமல் பொலிசில் பொதுவாக புகார் கொடுத்தார்.

பொலிசார், சைபர் கிரைம் அதிகாரிகளுடன் நடத்திய விசாரணையில் சதீஷ் தான் இப்படியான மோசமான செயலை செய்தார் என கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரின் செல்போனை கைப்பற்றிய போது அதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்ட சதீஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்