காஷ்மீர் பெண்களை காதலித்து திருமணம் செய்த சகோதர்களுக்கு நேர்ந்த கதி... கெஞ்சி சொன்ன பரிதாபம்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் காஷ்மீரைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட இரண்டு இளைஞர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் ராம்விஷ்ணுபூர் கிராமத்தை சேர்ந்தவர் பர்வேஸ் ஆலம் மற்றும் தர்வேஜ் ஆலம். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர்.

இவர்கள் இருவரும் ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் தச்சர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த சகோதரிகளான இரு பெண்களை காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து அந்தப் பெண்களுடன் தங்களது சொந்த ஊரான ராம்விஷ்ணுபூர் கிராமத்திற்கு வந்து விட்டனர். சில அங்கு தங்கிய அவர்கள் அந்த பெண்களை திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் காஷ்மீரி சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட சகோதரர்களை காஷ்மீர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இளம்பெண்களின் தந்தை காஷ்மீர் பொலிசாரிடம் தனது மகள்கள் கடத்தப்பட்டதாக புகார் அளித்ததை தொடர்ந்து, பீகார் பொலிசாரின் உதவியுடன் காஷ்மீர் பொலிசார் இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள், நாங்கள் இளம்பெண்களின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டோம். கட்டாயப்படுத்தவில்லை, கடத்தவுமில்லை என பொலிசாரிடம் கூறியுள்ளனர், இருப்பினும் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers