ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. திருநங்கை என கிண்டல்.. தற்கொலைக்கு முன்னர் கண்ணீருடன் பேசிய வீடியோ

Report Print Raju Raju in தெற்காசியா

தமிழகத்தில் இன்ஜினியரின் மரணத்தில் திடீர் திருப்பமாக ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.

டிப்ளமோ இன்ஜினீயரான இவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலையில் கொத்தனாருக்கு உதவியாளராக சென்று வந்தார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மணிகண்டன் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட் டது. அதாவது, மணிகண்டனின் பைக்கில் ஒரு கடிதம் மற்றும் ஒரு செல்போன் இருந்துள்ளது.

அந்த கடிதத்தில், அவருடைய நண்பரான மகேஷ் (26) என்பவருடன் தவறான பழக்கம் இருந்ததாகவும், அதுதொடர்பான மன உளைச்சலில் தற்கொலை செய்ய போவதாகவும் எழுதி இருந்ததாக தெரிகிறது.

மேலும் செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை மணிகண்டன் பதிவு செய்திருந்தார்.

அதில், மகேஷ் என்னுடன் நெருங்கிய நட்பில் இருந்தான். அவனுக்கு எல்லாரையும் விட நான்தான் முக்கியம் என்று அன்பாகப் பேசி என்னை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டான்.

இப்போது என்னை ஏமாற்றிவிட்டு வேலைக்குப் போகும் இடத்தில் நண்பர்களிடம் என்னை திருநங்கை என கிண்டலடிக்கிறான்.

எனது தற்கொலைக்கு மகேஷ் தான் காரணம். மகேஷ் நான் உன்னை சும்மா விடமாட்டேன்டா என கண்ணீருடன் பேசுவது போல உள்ளது. இதனிடையில் மகேசுக்கு திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து மகேஷ், மணிகண்டனிடம் இருந்த தொடர்பை விட முயன்றுள்ளார். இது தொடர்பாகவும் இருவருக்கும் பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது.

கடிதம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வைத்து மணிகண்டன் தற்கொலைக்கு மகேஷ் தான் காரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்