தமிழக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in தெற்காசியா

டெல்லியில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, 26ஆம் திகதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனிடையில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதோடு வரும் 26ஆம் திகதி வரை சிதம்பரத்தை கைது செய்யவும் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்