பாகிஸ்தானுடன் அதிகரித்துள்ள பதற்றம்.. இந்திய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in தெற்காசியா

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று போக்ரானுக்கு விஜயம் செய்த ராஜ்நாத் சிங், இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சுதந்திர இந்தியாவின் முக்கியமான நபர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இந்தியாவை ஒரு அணுசக்தியாக மாற்றுவதற்கான வாஜ்பாய்-ன் உறுதியான தீர்மானத்திற்கு சாட்சியாக இருந்த பகுதி போக்ரான்.

ஆனால், அணுஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கையில் இந்தியா தற்போது வரை உறுதியாக உள்ளது. இந்த கோட்பாட்டை இந்தியா கண்டிப்பாக கடைபிடித்துள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது என தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது அணுசக்தி கோட்பாட்டை 1999-ல் கொண்டு வந்தது, அதில் 'முதல் பயன்பாடுத்த மாட்டோம்' என்று அறிவித்தது, ஆனால் அணுகுண்டுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்காசிய நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்