வெள்ளத்தில் மிதக்கும் கேரளா! அந்தரத்தில் தொங்கியபடி நிறைமாத கர்ப்பிணி காப்பாற்றப்படும் காட்சிகள்

Report Print Fathima Fathima in தெற்காசியா

தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளான கேரளா, தமிழகத்தின் நீலகிரி, கோவை போன்ற இடங்களில் கடந்த சில நாள்களாகக் கனமழை பொழிந்து வருகிறது.

குறிப்பாகக் கேரளாவின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள் இந்தாண்டு மழை பொழிந்து வருவதால் கடவுளின் தேசமே நிலைக்குலைந்து போயுள்ளது.

இதுவரையிலும் 34 பேர் பலியாகி இருப்பதுடன் லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆறு பேர் கொண்ட குடும்பமொன்றை மீட்புப்படையினர் காப்பாற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாலக்காட்டின் அட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள், அவரது மகன் முருகேசன், மருமகள் லாவண்யா மற்றும் பேத்தி மைனா காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பவானி ஆற்றின் அந்த பக்கம் மாட்டிக் கொண்ட குடும்பத்தினரை, உள்ளூர்வாசிகள் காப்பாற்ற முடியாததால் மீட்புப்படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், இதில் லாவண்யா நிறை மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers