ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிந்தது! சிறப்பு அந்தஸ்தும் ரத்து என இந்திய அரசு அதிரடி அறிவிப்பு

Report Print Raju Raju in தெற்காசியா

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளதோடு, ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தொடர்பான விவகாரம் மற்றும் அம்மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற மிகபெரிய கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

இதையடுத்து இது தொடர்பாக சற்று முன்னர் மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதோடு ஜம்மு காஷ்மீர் இரண்டாவதாக பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரியும் நிலையில் ஒன்றுக்கு மட்டும் சட்டப்பேரவை இருக்கும்.

லாடாக் பகுதி பிரிக்கப்பட்டு சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டபேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது

மேலும் காஷ்மீருக்கான 4 சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். ஜனாதிபதி கையொப்பம் இட்ட பின்னர் இது அமலுக்கு வரும்.

இந்த சட்டம் கொண்டு வருவதால் அனைத்து சிறப்பு அந்தஸ்தையும் காஷ்மீர் இழக்கிறது. மேலும் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களுக்கு காஷ்மீர் கட்டுப்பட வேண்டிய அவசியத்திற்கு வருகிறது. மாநிலத்திற்கான தனி சட்டம் இனி செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்