காஷ்மீரில் உச்சக்கட்ட பதற்றம்! பிரித்தானிய மக்களுக்கு அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in தெற்காசியா

ஜம்மு காஷ்மீர் நிகழும் பதற்றம் தொடர்பாக ஸ்ரீநகரில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்கள் நாட்டு மக்கள் அங்கு செல்ல வேண்டாம் என பிரித்தானியாவும், ஜேர்மனியும் வலியுறுத்தியுள்ளன.

காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களை காட்டி கடந்த வாரம் திடீரென மத்திய அரசு ராணுவ படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியது.

முதலில் 10 ஆயிரம் வீரர்களை காஷ்மீருக்கு மத்திய அரசு அனுப்பியது. அதன் பின்னர் 28 ஆயிரம் வீரர்களை கூடுதலாக அனுப்பியது.

இதற்கிடையே அமர்நாத் யாத்திரை பக்தர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து யாத்திரையை ரத்து செய்து அனைவரையும் உடனே காஷ்மீரை விட்டு வெளியேறு மாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைத்து வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களையும் காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. விமான நிறுவனங்கள் சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளன.

ராணுவம் குவிக்கப்படுவதோடு, வெளிமாநில மக்கள் வெளியேற்றப்படுவதாலும் காஷ்மீர் மக்களிடம் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. எல்லையில் பதற்றம் நிலவுவதால் அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றம் காரணமாக தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு யாரும் சுற்றுலா செல்லவேண்டாம் என்றும் ஜம்மு-காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறும் பிரித்தானிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதே உத்தரவை ஜேர்மனி அரசும் அந்நாட்டு மக்களுக்கு பிறப்பித்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்