வீட்டில் இரவில் தூங்கி கொண்டிருந்த 17 வயது சிறுமி! காலையில் கண்விழித்த போது தாய் கண்ட காட்சி

Report Print Raju Raju in தெற்காசியா

தமிழகத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூர் கிராமத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி கடந்த மாதம் 14ம் திகதி இரவு, தனது தாயாருடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

மறுநாள் காலை அவருடைய தாயார் படுக்கையிலிருந்து எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வந்த நிலையில், சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சில தகவல்களின் அடிப்படையில் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் மும்பையில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு மும்பைக்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்டதோடு, அவரை கடத்திச்சென்ற முகமதுரபீக் என்கிற வாலிபரையும் கைது செய்தோம்.

முகமது ரபீக்கிடம் நடத்திய விசாரணையில், மும்பையை இதயத்துல்லா.

இவரது மகன் முகமதுரபீக் (22) இதயத்துல்லா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு முகமதுரபீக் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

இவருடைய பெரியம்மா தாராபுரம் அருகே உள்ள அலங்கியம், பெரிய பள்ளிவாசல் வீதியில் குடியிருந்து வருகிறார். பெரியம்மாவைப் பார்ப்பதற்காக அடிக்கடி முகமதுரபீக் அலங்கியத்திற்கு வருவது வழக்கம்.

அவ்வாறு முகமதுரபீக் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தபோது, தாராபுரத்தில் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்த 17 வயது சிறுமியை பார்த்துள்ளார்.

அந்த சிறுமி பள்ளிக்கு வந்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் போது, தினமும் முகமதுரபீக் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்படி ஒருநாள் அவர் சிறுமியை பின்தொடர்ந்து சென்றபோது, அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார்.

கூடவே திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். சிறுமி இதற்கு சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் ஒருநாள் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, முகமதுரபீக் அங்கு சென்று, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தன்னுடன் வந்தால், மும்பையில் பல இடங்களை சுற்றிக்காட்டுவதோடு இருவரும் திருமணம் செய்து கொண்டு, சொகுசாக வாழலாம் என ஆசைகாட்டி, சிறுமியை முகமது ரபீக் மும்பைக்கு கடத்தி சென்றுவிட்டார் என கூறியுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் முகமதுரபீக்கையும், சிறுமியையும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பிறகு முகமதுரபீக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்