மனித வெடிகுண்டாக மாறிய குழந்தை.. திருமண விழாவில் தற்கொலை தாக்குதல்; ஆப்கானில் பயங்கரம்

Report Print Basu in தெற்காசியா

தெற்காசியா நாடான ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சியில், குழந்தை ஒன்று மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தான், நங்கர்ஹார் மாகாணத்தின் பச்சிராகம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை அரசாங்கத்தின் இராணுவ தளபதியை குறிவைத்து நடந்த தாக்குதலில், குழந்தை பயன்படுத்தப்பட்டதாக அம்மாகாண செய்தித் தொடர்பாளர் அத்தவுல்லா குகியானி தெரிவித்துள்ளார். இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் தெரிவித்துள்ளது.

தலிபான் மற்றும் ஆப்கான் இடையே நேற்று அமைதி பேச்சுவாரத்ததை நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் சமாதனத்திற்கான பாதையை தேர்வு செய்துனர். மேலும், எதிர்காலத்தில் முறையான பேச்சுவார்த்தைகளுக்கும் ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் குழு, ஐ.எஸ். கோரசன் என்றும் அழைக்கப்படுகிறது, இது பச்சிரகாமில் தீவிரமாக செயல்படுவதாக அறியப்படுகிறது.

கடந்த ஆண்டு காபூல் கல்வி மையத்தில் தற்கொலை குண்டுவெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது உட்பட ஆப்கானிஸ்தானில் நடந்த பல பயங்கரமான தாக்குதல்களுக்கு ஐ.எஸ் கோரசன் குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...