சிவப்பு கலர் சுடிதார்.. நெற்றியில் சந்தனம்: அழகான இளம் பெண்கள் செய்த மோசமான செயல்

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் சாதுர்யமாக கூட்டம் நிறைந்த கடை வீதி பகுதியில் நகைகள் மற்றும் பணத்தை திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை ஆழ்வார் பேட்டை இருக்கும் பீமண்ணா கார்டன் பகுதியில் இரண்டு அழகிய இளம் பெண்கள் இங்கும், அங்கும் சுற்றித் திரிந்துள்ளனர்.

அதில் ஒருவர் மஞ்சள் நிற சுடிதார், நெற்றியில் குங்கும், மற்றோருவர் சிவப்பு கலர் சுடிதார், நெற்றியில் குங்குமம், சந்தனம் வைத்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருக்கும் கடை பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் நகைகளை பறிப்பதும், பணத்தை கொள்ளையடிப்பதுமாக தங்கள் வேலையை காட்டியுள்ளனர்.

குறிப்பாக, இளைஞர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது, அந்த பணத்தை பறித்து கொண்டு இந்த இளம்பெண்கள் ஓடியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் உடனடியாக கூச்சலிட அங்கிருந்த மக்கள் அந்த இரண்டு பெண்களையும் மடக்கி பிடித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்த பர்ஸை வாங்கி பார்த்ததில், 25 ஆயிரம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த பணம் இருந்துள்ளது.

மேலும் அப்பகுதி மக்கள் மொத்தமாக சேர்ந்து இரு பெண்களையும் தாறுமாறாக கேள்வி கேட்டு விசாரித்த போது, 40 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள், 25 ஆயிரம் ரூபாய் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

அதை பறிமுதல் செய்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்