பாம்பு கடித்ததில் துடிதுடித்த 15 வயது சிறுமி.. மருத்துமனைக்கு அழைத்து செல்லாமல் பெற்றோர் செய்த செயல்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் 15 வயது சிறுமியை கொடிய விஷமுள்ள பாம்பு கடித்தும் அவரை மருத்துவமனைக்கு கூட்டி செல்லாமல் வீட்டிலே வைத்து குடும்பத்தார் பிரார்த்தனை செய்ததில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கல்னா கிராமத்தை சேர்ந்த கவிதா (15). இவர் நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கொடிய விஷமுள்ள பாம்பு அவரை கடித்தது.

இதையடுத்து வலியால் துடித்த கவிதா கதறினார். இந்நிலையில் வீட்டில் இருந்த கவிதாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்து பிரார்த்தனை செய்தனர்.

கவிதாவுக்கு பாம்பு கடி குணமாக வேண்டும் என பல மணி நேரம் வேண்டினார்கள்.

ஆனால் இந்த பிரார்த்தனையின் இடையிலேயே கவிதா உயிரிழந்துள்ளார். இதை உணராமல் தொடர்ந்து அவர்கள் பிரார்த்தித்தனர். இதையடுத்து கவிதா உடலில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது மருத்துவர்கள் கவிதா இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

பாம்பு கடித்த சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்திருந்த குடும்பத்தாரின் செயல் ஊர் மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்