பெண் அதிகாரியை கண் மூடித்தனமாக தாக்கும் நபர்கள்... பொலிசார் முன்பே நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் பெண் வனத்துறை அதிகாரியை கிராம மக்கள் கட்டையால் தலையில் அடிக்கும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கான மாநிலத்தின் Kagaznagar பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக அனிதா என்ற வனத்துறை அதிகாரி பொலிசாருடன் சென்றுள்ளார்.

அப்போது, டிராக்டர்களைக் கொண்டு நிலத்தை சமன் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்கட்சி எம்.எல்.ஏவின் தம்பியான கோனேரி கிருஷ்ணாவின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து டிராக்டர்களை அடித்து நொறுக்கினர்.

இதில் பெண் அதிகாரியை அவர்கள் கட்டையால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் டிராக்டரில் இருந்த நபரை கட்சியினர் தாக்க வந்ததால், அவர்களை தடுக்க முற்பட்ட போது, அவரை தாக்கியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்