கணவருக்கு துரோகம் செய்த இளம் மனைவி.. அதனால் அவருக்கு நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் இளம்பெண் கணவரை விவாகரத்து செய்ய மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் பிங்கி. இளம் பெண்ணான இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில மாதத்துக்கு முன்னர் சன்னி (26) என்ற இளைஞருடன் பிங்கிக்கு கூடா நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து சன்னியும், பிங்கியும் அடிக்கடி பைக்கில் வெளியில் சுற்ற ஆரம்பித்தனர்.

இதை சமீபத்தில் கண்டுபிடித்த பிங்கியின் கணவர் மனைவியை கண்டித்ததோடு இருவரும் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் கணவருக்கு இனியும் துரோகம் செய்யக்கூடாது என தனது தவறை உணர்ந்த பிங்கி, சன்னியுடனான தொடர்பை துண்டித்தார்.

ஆனாலும் பிங்கியின் கணவர் வேலைக்கு சென்ற பின்னர் அவர் வீட்டுக்கு வந்த சன்னி தொடர்ந்து பிங்கிக்கு தொல்லை கொடுத்தார்.

நேற்று காலை பிங்கி வீட்டுக்கு மீண்டும் வந்த சன்னி, கணவரை பிங்கி விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் வந்துவிடும் படி கூறினார்.

ஆனால் இதற்கு பிங்கி சம்மதிக்காத நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சன்னி பிங்கியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தானும் கழுத்தை அறுத்து கொண்டார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிங்கி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில் சன்னிக்கு ஐசியூவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்