மனைவியின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய கணவன்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் வரதட்சணைக்காக, மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சிதுல். இவருக்கும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் வரட்சணை கேட்டு மனைவியை சிதுல் அடித்து கொடுமைப்படுத்தினார்.

இது குறித்து மனைவி அவர் குடும்பத்தாரிடம் கூறிய நிலையில் அவர்கள் பொலிஸ் புகார் கொடுத்ததையடுத்து பொலிசார் சிதுலை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

இதன் பின்னர் வரதட்சணை பணத்தை பெற மிக மோசமான செயலை செய்தார் சிதுல்.

தன்னுடைய மனைவியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி ரூ 5 லட்சம் வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து சிதுல் மனைவி மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவர்களால் ரூ 5 லட்சத்தை கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் சிதுல் மனைவி மற்றும் அவர் குடும்பத்தார் இது தொடர்பாக உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.

விரைவில் சிதுல் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers