இரண்டு நாட்களில் இதை செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வேன்... அதிரவைத்த கர்ப்பிணி பெண்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கர்ப்பமாக இருக்கும் இளம்பெண் தன் பெற்றோருக்கு இரண்டு நாட்கள் கெடு விதித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமை சேர்ந்த இளம் பெண் வேறு மதத்தை சேர்ந்த இளைஞரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தன்னையும் தனது கணவரையும் குடும்பத்தார் நிம்மதியாக வாழ விடவில்லை என கூறி அப்பெண் ஒரு வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அதில், நான் நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளேன், என் கணவர் மீது என் குடும்பத்தார் கடத்தல் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரை இரு தினங்களுக்குள் திரும்ப பெறவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்.

தான் உயிரிழந்தால் அதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளும் காரணம், அவர்களும் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers