4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 13 வயது சிறுவன்... தாய் சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் 4 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் சங்கத் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், தனது மகளை பக்கத்து வீட்டு சிறுவன் விளையாடுவதற்காக அழைத்துச் சென்றதாகவும், ஆனால் நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அவர் சிறுவனின் வீட்டிற்கு சென்ற போது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் அந்த சிறுவன் உடனடியாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers