பள்ளிக்கூட கழிப்பறையில் சடலமாக கிடந்த மாணவி... எழுதி வைத்திருந்த கடிதம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பள்ளிக்கூட கழிப்பறையில் மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் இயங்கி வருகிறது ஜிடி பிர்லா பள்ளிக்கூடம்.

இப்பள்ளியின் கழிப்பறையில் நேற்று மதியம் பத்தாம் வகுப்பு மாணவி சடலமாக கிடப்பதை ஆசிரியை ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்து மணிக்கட்டில் பிளேடால் அறுக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்த மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் கூறுகையில், உயிரிழந்த மாணவியின் தலை பகுதி பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவியின் பெற்றோரிடம் விசாரித்து வருகிறோம்.

மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றியுள்ளோம்.

அதில், நான் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன், என்னால் கடந்த மூன்று மாதங்களாக தூங்க முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

அந்த மாணவி நன்றாக படிப்பவர் என தெரியவந்துள்ளது, சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

கடந்த 2017-ல் ஜிடி பிர்லா பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து இரண்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...