உறவுக்கு மறுத்த புதுமணப்பெண்: மருத்துவ சோதனையில் அதிர்ந்த கணவர்

Report Print Arbin Arbin in தெற்காசியா

பாகிஸ்தானில் புதுமணப்பெண் ஒருவர் பிறப்புறுப்பு குறைபாடு காரணமாக கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவர்களால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானில் 20 வயது புதுமணப்பெண் ஒருவர் விசித்திர குறைபாடு காரணமாக கணவரால் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார்.

நாளுக்கு நாள் துன்பம் அனுபவித்துவந்த அந்த இளம்பெண் ஒருகட்டத்தில் தமது பெற்றோரிடமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்கள் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக அடிவயிற்றில் வலி இருப்பதாகவும்,

இதுவரை தமக்கு மாதவிடாய் ஏற்பட்டது இல்லை எனவும், மருத்துவர்களிடம் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

மாதவிடாய் ஏற்படாதது, குறைபாடல்ல என கருதிய அவரது தாயார், மகளின் திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்து நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், கணவரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பிறப்புறுப்பில் குறைபாடு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும், அவரது இனப்பெருக்க அமைப்பு முழு வளர்ச்சியை எட்டவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிந்து கொண்டனர்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட மருத்துவர்கள் 2 மாத காலம் பிறப்புறுப்பு வளர்ச்சியடைய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து 2 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சைக்கு பின்னர் கணவருடன் உறவு கொள்ள அனுமதித்துள்ளனர்.

இதனிடையே சிகிச்சை முடிந்த 7-வது மாதம் அவர் கருவுற்றதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மட்டுமின்றி சிசேரியன் முறைப்பட்டி அவர் ஆண் பிள்ளை ஒன்றையும் பெற்றெடுத்துள்ளார்.

குறித்த சிகிச்சையானது தமக்கு புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்து தந்துள்ளதாக கூறும் அந்த இளம்பெண்,

தமக்கிருந்த குறையால், குடும்பத்தில் இழி சொற்களை கேட்கும் நிலைக்கு உள்ளானதாகவும், தாம் பெண் அல்ல என கொச்சைப்படுத்தியதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது தாம் தாயானது மட்டுமல்ல, சமூகத்தில் தமக்கிருந்த கெட்டப்பெயர் விலகியுள்ளது எனவும் அவர் கண்கள் கலங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்