மாமியாரை இரக்கமின்றி கொடூரமாக அடித்து உதைத்த மருமகள்... பதறவைக்கும் வீடியோ

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவின் ஹரியானாவில் மாமியாரை கொடூரமாக மருமகள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் மாநில முதல்வரே இவ்விவகாரத்தில் தலையிட்டதோடு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் மகேந்திரகரில் உள்ள நிவாஸ் நகர் கிராமத்தில் பெண் ஒருவர் தனது வயதான மாமியாரை கொடூரமாக அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார்.

இதை அவ்வப்போது கண்டு வெறுத்துப் போன அப்பெண்ணின் மகளும், மூதாட்டியின் பேத்தியுமான சிறுமி செல்போனில் இதை வீடியோவாக எடுத்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் பார்வைக்கும் சென்றது.

இதை தொடர்ந்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த மோசமான செயல் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய நடத்தையை பொருத்து ககொள்ள முடியாது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என பதிவிட்டுள்ளார்.

வீடியோவை பார்த்து உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்