முதலிரவுக்கு முன் ஏற்பட்ட வாக்குவாதம்... மணமகன் எடுத்த அதிரடி முடிவால் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

Report Print Abisha in தெற்காசியா

தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்த புதுமண தம்பதியினருக்கு முதலிரவுக்கு முன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் 29வயதான குமார். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரது மகள் சரண்யா (20) என்பவருக்கும் நேற்று காலை மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து நேற்று இரவு குமாருக்கும், சரண்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட குமார் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டார். உடனே உறவினர்கள் அறையின் கதவை தட்டினார். ஆனால் அவர் நீண்ட நேரமாக தட்டியும் கதவை திறக்காததால் உறவினர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை கண்ட மணமகள் சரண்யாவும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே பொலிசார் அங்கு விரைந்து வந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்