40 வருடங்களுக்கு பின் எங்கள் குடும்பத்தில் நடக்கும் திருமணம்.. பணம் இல்லாததால் தந்தை செய்த செயல்

Report Print Abisha in தெற்காசியா

மகளின் திருமணச் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால், மரங்களை வெட்டிய நபருக்கு அதற்கேற்ற தக்க தண்டனை கொடுத்துள்ளது வனத்துறை

இந்தச் சம்பவம் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பட்லாபூர் பகுதியில் நடந்திருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த Dasharath Kurhade என்பவர், அவர் வசித்துவந்த இடத்துக்கு அருகே கிட்டத்தட்ட 850 மரங்களைக் கடந்த சில நாள்களுக்கு முன்னால் வெட்டியிருக்கிறார். எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இயந்திரத்தின் உதவியால் இரண்டே நாள்களில் மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தியிருக்கிறார்.

விஷயம் அறிந்து வந்து இடத்தைப் பார்வையிட்ட வனத்துறையினர், மொத்த இடமும் காலியாக இருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். மரங்கள் வெட்டியது அவரின் சொந்த நிலத்தில் என்றாலும், முறையான அனுமதி எதுவும் அவர் பெறவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில்,``தகவல் கிடைத்தவுடன், அதிகாரிகள் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க அங்கே வந்துள்ளனர். ஆனால் அவர், அதற்கு முன்னரே அனைத்து மரங்களையும் வெட்டியிருந்தார்.

இது சட்டப்படி தவறு என்பதால், அவரது செயலுக்குத் தண்டனையாக, அடுத்த நான்கு மாத காலத்துக்குள் வெட்டியதை விடவும் இருமடங்கு மரங்களை அதே இடத்தில் நட வேண்டும் எனவும், அதைச் செய்யவில்லை என்றால், மரம் நடுவதற்கு ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வனத்துறை உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து தண்டனை பெற்றவர் தெரிவிக்கையில், '40 வருடங்களுக்குப் பிறகு எங்களின் குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம். ஆனால், அதை நடத்தத் தேவையான பணம் என்னிடம் இல்லை. எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை. எனவே தான் மரத்தை வெட்டி விற்றோம். எங்களுக்கு அது குற்றம் என்பதுகூடத் தெரியாது. தண்டனை கொடுங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அபராதம் செலுத்த பணம் எங்களிடம் இல்லை' என தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்