சென்னையிலிருந்து இலங்கை வழியாக வெளிநாட்டிற்கு செல்லவிருந்த நபர்... அவரின் சூட்கேஸை சோதித்த போது கிடைத்தது என்ன தெரியுமா?

Report Print Santhan in தெற்காசியா

சென்னையிலிருந்து இலங்கை வழியாக சிங்கப்பூர் செல்லவிருந்த நபரின் சூட்கேஸை சோதித்த போது, கட்டுக்கட்டாக அமெரிக்க டொலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நேற்று சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சரியாக 10.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.

இதனால் விமானப் பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் ஸ்கேன் செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த சர்பூதின் அலி (58) என்பவர் இலங்கையின் கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்ல வந்துள்ளார்.

அவரிடம் இருந்த சூட்கேஸை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, பணம் இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக அந்த சூட்கேஸை அதிகாரிகள் தனியாக திறந்து பார்த்துள்ளனர். ஆனால் அதில் ஆடைகள் மட்டுமே இருந்ததால், பொலிசாருக்கு மேலும் சந்தேகம் அதிகரித்துள்ளது.

சூட்கேஸில் இருக்கும் உடமைகளை எடுத்துவிட்டு நுணுக்கமாக ஆய்வு செய்த போது சூட்கேஸின் இரண்டு பக்கவாட்டிலும் ரகசிய அறை இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டொலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடிக்க முடிந்தது.

இது சென்னையில் கைப்பற்றப்பட்டதால், அதன் இந்திய மதிப்பு 9.6 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சர்பூதின் அலியிடம் நடத்திய விசாரணையில் அது கணக்கில் வராத பணம் என்பதும் சிங்கப்பூரில் ஒருவருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

இருப்பினும் சுங்க அதிகாரிகள் அது கடத்தல் பணமா அல்லது ஹவாலா பணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers