இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுச்சிக்கல் தான் இந்த பிரச்சனைக்கு காரணம்: இம்ரான் கான்

Report Print Kabilan in தெற்காசியா

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுச்சிக்கல் மட்டுமே பிராந்தியத்தின் அமைதிக்கும், நிலையான தன்மைக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வந்தது. இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்த பிறகு, இரு நாட்டுக்கும் இடையேயான பதற்றமான சூழல் குறைந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீன சர்வதேச கலாச்சார தொடர்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது இந்தியா-பாகிஸ்தான் உறவுச்சிக்கல் குறித்து அவர் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுச்சிக்கல் மட்டுமே பிராந்தியத்தின் அமைதிக்கும், நிலையான தன்மைக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பகிறது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலையான தன்மை இல்லாமல் பாகிஸ்தானால் பொருளாதார வளர்ச்சி பெற முடியாது.

எனவே அதை அடைவதற்கான இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட வழி ஏற்படும் என நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...