திருமணத்திற்காக வீட்டிற்குள் புகுந்து புதுமாப்பிள்ளை செய்த அதிர்ச்சி செயல்..பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய கொலையாளி திருமண செலவிற்காக இந்த கொலையை செய்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பெருமாள் தாங்கல் புதூர் கிராமம், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர், வனப் பெருமாள். இவருக்கு விஜியலட்சுமி என்ற மனைவியும், போத்திராஜ் என்ற மகனும் உள்ளனர்.

வனப் பெருமாள் செக்யூரிட்டியாக வேலை பார்ப்பதால், இரவு பணிக்காக சென்றுள்ளார் அப்போது வீட்டில் மனைவி விஜியலட்சுமி மற்றும் போத்திராஜ் தனியாக இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் வீட்டின் உள்ளே புகுந்த முகமுடி அணிந்த மர்மநபர் இரண்டு பேரையும் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுவிட்டான்.

மனைவி மற்றும் மகன் இறந்துகிடப்பதை காலையில் வந்த வனப் பெருமாள் அதிர்ச்சியடைந்த உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில் வெங்கட் என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. இங்கு வடமாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்ப்பதால், அவர்களின் செயலாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இருப்பினும் இறந்து கிடந்த பெண்ணின் நகத்தில் இரத்தம் மற்றும் தோல் இருந்தன். அதை பார்த்த போது அந்த பெண்ணின் இரத்தம் மற்றும் தோல் இல்லை என்பது தெரியவந்தது.

கைதான வெங்கட்

இதனால் அந்த இரத்தம் கொலை செய்தவரின் இரத்தம் என்பது உறுதியானதால், அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தோம்.

அப்போது அங்கிருந்த வெங்கட் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அந்த நபரின் ரத்த மாதிரியை ரகசியமாக பரிசோதித்த போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகத்திலிருந்த ரத்தமும் வெங்கட்டின் ரத்தமும் ஒன்று என்பது தெரியவந்தது.

மேலும், வெங்கட்டின் கழுத்துக்குக் கீழ் நகக்கீறல்கள் உள்ளன. தொடர்ந்து வெங்கட்டைப்பிடித்து விசாரித்த போது, அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் திருமணச் செலவுக்காகத்தான் அவர் இப்படி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

வெங்கட் பால் வியபாரம் செய்து வருகிறார். வனப் பெருமாள் வசதியான குடும்பம் என்பதால், அவர்கள் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் படி வனப்பெருமாள் இரவு வேலைக்கு சென்றதை அறிந்த வெங்கட், அன்று இரவு அவர்களின் வீட்டு மாடியில் தூங்கியுள்ளார்,

அதன் பின் அதிகாலையில் விஜி கோலம் போட வருவார் என்பதால், அவர் கோலம் போட சென்றவுடன் வீட்டில் இருக்கும் நகை, பணங்களை திருட திட்டமிட்டுள்ளான்,

அதே போன்று விஜி கோலம் போட செல்ல, வெங்கட் வீட்டில் இருக்கும் நகைகளை எடுக்கும் போது கேட்ட சத்ததால், உள்ளே வர, அவரை வெங்கட் கொலை செய்துள்ளார். அம்மா அவருடன் உயிருக்கு போராடுவதை அறிந்து அப்பாவிற்கு போன் செய்த போத்துராஜையும் வெங்கட் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்