பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தானில் இம்ரான் கானின் பிரதமர் செயலகத்தின் ஆறாவது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் செயல்பட்டு வருகிறார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானின் பிரதமர் செயலகம் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் செயலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

செயலகத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது பிரதமர் இம்ரான் கான் கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து இம்ரான் கான் உடனடியாக வெளியேற்றப்பட்டார் என்றும், தீயை அணைக்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers