தந்தையின் இழப்பு.... தாயின் காதலனால் ஏற்பட்ட தனிமை: உயிரிழந்த 7 வயது சிறுவன் வரைந்த புகைப்படம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

கேரளாவில் தாயின் காதலனால் தாக்கப்பட்டு உயிரிழந்த 7 வயது சிறுவன் தனது வாழ்க்கையின் தனிமை மற்றும் தந்தையின் இழப்பால் தனது வாழ்வில் ஏற்பட்ட வெற்றிடம் குறித்து வரைந்திருக்கும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் தொடுப்புழாவை சேர்ந்த 7 வயது சிறுவன், தனது தாயின் காதலன் அருண் ஆனந்தால் கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டிருந்தான்.

மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் மூளை செயல்பாடு சரியாக இல்லாத காரணத்தால் கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்தது கேரள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அருண் ஆனந்த் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், உயிரிழந்த சிறுவனின் தாயை முக்கிய சாட்சியாக்கியுள்ளனர். போதைக்கு அடிமையான அருணுடன் இணைந்து சிறுவனின் தாய் இரவு நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்றுள்ளார்.

சிறுவனை தனியாக வீட்டில் அடைத்துவிட்டு இரவு 11 மணிக்கு இவர்கள் இருவரும் வெளியே சென்றுவிட்டு காலை 5மணிக்கு வீடு திரும்புவார்கள்.

இதனால், அதிகம் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தனிமையை புகைப்படமாக வரைந்து வைத்துள்ளான். அதுமட்டுமின்றி தனது தந்தை பிஜீ மீது அதிக அன்பு கொண்ட சிறுவன் அவரது இழப்பின் வலியையையும் புகைப்படமாக வரைந்துள்ளது பார்ப்பதற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடித்துவிட்டு இரவு நேரத்தில் வெளியே சென்ற அருண் பலமுறை பொலிசில் சிக்கியுள்ளான். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே பயணித்த காட்சிகளும் சிசிடிவி கமெராக்காளில் பதிவாகியுள்ளன.

மேலும், அருணின் காரில் இருந்து கோடாரி, போதை மருந்துகள் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள், போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்தார்களா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பவத்தின் பின்னணி

பிஜீ என்பவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது நண்பரான அருண் என்பவர் அடிக்கடி குடியிருப்புக்கு வந்து சென்றதன் மூலம் பிஜீவின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பிஜீ இறந்த மூன்று நாட்களிலேயே தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவரது மனைவியுடன அருண் வற்புறுத்தியுள்ளார்.

கணவர் இறந்தபின்னர் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருணுடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் பிஜீவின் மனைவி. இந்நிலையில் தான், போதைக்கு அடிமையான அருண், தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி பிஜீவின் மனைவியை வற்புத்தி வந்தததன் இறுதியில் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுநீர் கழித்த 7 வயது சிறுவனை தூக்கி தரையில் தலைகீழாக அடித்ததில் மூளை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளான்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers