200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் சிக்கியது?: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆறுதல் கூறும் வீடியோ!

Report Print Balamanuvelan in தெற்காசியா

இந்திய தாக்குதலில் 200க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து , பாகிஸ்தான் மறுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், சிலரை கட்டித்தழுவி ஆறுதல் கூறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு ஆறுதல் கூறும் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் பேசும்போது, 200க்கும் மேற்பட்ட போராளிகள் தியாகிகளானதாக கூறுகிறார்.

அத்துடன் அவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக எதிரிகளை எதிர்த்து போராடி உயிர் விட்டதால், அவர்கள் அல்லாவிடமிருந்து சிறப்பு சலுகைகள் பெறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைத் தாங்குவதாகவும் அவர் அந்த வீடியோவில் உறுதியளித்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து பேசியுள்ள அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானின் கிஜித் பகுதியைச் சேர்ந்த Senge Hasnan Sering என்பவர், தாக்குதல் நடந்தவுடன், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பாலக்கோட்டிலிருந்து கைபர் பக்துங்வா பகுதிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை சில உள்ளூர் உருது மொழி பத்திரிகைகளும் உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த Sering, இந்த வீடியோ நம்பத்தகுந்ததுதானா என்பது தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றாலும், பாலக்கோட்டில் நடந்த மிக முக்கியமான ஒன்றை பாகிஸ்தான் அரசு நிச்சயம் மறைக்கிறது என்றார்.

இதுவரை, சர்வதேச ஊடகங்களையோ, உள்ளூர் ஊடகங்களையோ தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை பார்வையிடவும் சேதங்களை கணக்கிடவும் பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என்பதோடு, தாக்குதல் நடந்தது உண்மைதான் என்றும், ஆனால் வனப்பகுதியும் பண்ணை நிலங்களும் மட்டுமே பாதிக்கப்பட்டது என இன்னமும் கூறிவருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers