32 வயதில் 12 கொலைகள்: கொடூர குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தை உலுக்கிய கொடூர கொலைகாரனை இறுதியில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானாவின் மஹ்பூநகர் மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளியை கொலை செய்த வழக்கிலேயே யூசுப் பாஷா கைதானியுள்ளார்.

யூசுப், தமது 16-ஆம் வயதில் முதல் கொலையை செய்துள்ளார். தமது பணத்தேவைக்காகவே யூசுப் அனைத்து கொலைகளையும் செய்துள்ளார்.

அனைவரிடமும் மிகவும் நட்புடன் பழகும் யூசுப், அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர் யாரும் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்து வந்துள்ளார்.

தாம் ஒரு ஓவியர் என கூறியே பலரிடமும் நட்பு பாராட்டியுள்ளார். பின்னர் புதையல் இருக்கும் ஆவணம் ஒன்று தம்மிடம் சிக்கியுள்ளதாகவும்,

மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறி, அவர்களிடம் விலை பேசுவார்.

பின்னர், பணத்துடன் செல்லும் நபர்களை கண்ணில் மிளகாய் தூள் தூவி, பாறாங்கல்லால் தலையில் அடித்து கொலை செய்து வந்துள்ளார்.

தமது இரையிடம் இருந்து பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு, பின்னர் உடலை அங்கேயே மறைவு செய்துவிட்டு தப்புவதாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

யூசுப் இதுவரை 12 கொலைகள் செய்துள்ளதாகவும், ஒவ்வொரு கொலையும் பணத்திற்காகவே எனவும் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

யூசுபின் இரண்டு மனைவிகளும் பாலியல் தொழில் செய்து வருகின்றனர். சமீபத்தில், பாலராஜ் என்பவரிடம் குறைந்த விலையில் ஆடுகளை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.

அவரிடம் இருந்து சுமார் 14,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இந்த வழக்கிலேயே யூசுப் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளார். பாலராஜின் மொபைல் தொடர்பை நோட்டமிட்ட பொலிசார் இறுதியில் யூசுபை பிடித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers