100க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல்..... தவறான வீடியோக்கள்: மன்மதன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை குறிவைத்து காதல் வலை வீசி அவர்களை தவறாக வீடியோ எடுத்த திருநாவுக்கரசு என்ற நபரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருநாவுக்கரசு என்பவர் பேஸ்புக் வாயிலாக கல்லூரி மாணவிகள், பெண் மருத்துவர்கள் மற்றும் குடும்ப பெண்களை தொடர்பு கொண்டு நட்பாக பழகி பின்னர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

அதன்பின்னர், அவர்களை தனியாக அழைத்து சென்று தவறாக வீடியோ எடுத்து அதனை மிரட்டி பணம் பிடுங்கியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரில் பேரில், அவர் இதுவரை செய்துவந்த மன்மத விளையாட்டுகள் வெளியே வந்துள்ளன.

இதுதொடர்பாக இவருடன் கூட்டாக சேர்ந்து செயல்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நபரான திருநாவுக்கரசை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருநாவுக்கரசு பேசுவதுபோல் ஒரு வீடியோ பரவி வருகிறது.

'என் மீது எந்த தவறும் இல்லை. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். என் மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால் வழக்கு தொடர்ந்த பெண்ணின் கையாலேயே தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.

மேலும் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் தொழில் மற்றும் அரசியல் ரீதியாக எதிரிகள் உள்ளனர் என கூறியுள்ளார்.

இதுகுறித்து டிஎஸ்பி ஜெயராமன் கூறும்போது, தனிப்படையினர் திருநாவுக்கரசை நெருங்கிவிட்டனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்