யானையை உட்காரச் சொல்லி அடித்து துன்புறுத்திய பாகனுக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in தெற்காசியா

கேரளாவில் யானை ஒன்றை குளிக்க செய்யும் போது அதை உட்கார சொல்லி பாகன் அடித்து துன்புறுத்தியதை அடுத்து, யானை பாகன் மீதே உட்கார்ந்திருக்கிறது.

கேரளாவின் காரப்புழா என்னும் இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த யானையை குளிப்பாட்டும் அருண் பணிக்கர் (40) என்னும் அந்த பாகன், யானையின் பின் பக்கத்தை கழுவுவதற்காக அதை உட்காரச் சொல்ல, அது கீழ்ப்படிய மறுக்கிறது.

அதை உட்காரச் சொல்லி அவர் அடிக்க, அது உட்காரும் நேரத்தில் சரியாக அருண் வழுக்கி விழுகிறார். யானை அவர் மீதே உட்கார்ந்து விடுகிறது.

அவரது கூக்குரல் கேட்டு ஓடி வரும் இன்னொரு நபர் நடந்ததைக் கண்டு யானையை எழுப்புகிறார்.

யானையும் எழும்புகிறது, ஆனால் அதற்குள் யானையின் கீழ் நசுங்கிய அருண் உயிர் போய் விட்டது.

பாகனின் மரணம் யானையின் கையில்தான் என்று சொல்வார்கள், அதை அருணின் மரணம் நிரூபித்திருக்கிறது.

வீடியோவை காண


மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்