மீண்டும் தாக்குதலா…? பாகிஸ்தான் விமானபடை தளபதியின் புதிய உத்தரவு

Report Print Abisha in தெற்காசியா

பாகிஸ்தான் விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி அதன் தளபதி மார்ஷல் முஜைத் அன்வர் கான் உத்தரவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இத்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம்தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து இந்திய விமானப் படைத் தலைவர் தானோவா நேற்று பேசியபோது இந்தியாவின் தாக்குதல்கள் தொடரும் என்பது போல் குறிப்பிட்டார்.

இதனைதொடர்ந்து, பாகிஸ்தான் படை வீரர்களுடன் கலந்துரையாடிய அந்நாட்டு விமானப் படைத் தளபதி மார்ஷல் முஜைத் அன்வர் கான், எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார் .

மேலும்அவர் பேசுகையில், இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் எப்.16 அல்ல என்றும், சீனாவும் பாகிஸ்தானும் கூட்டாக உற்பத்தி செய்யக்கூடிய ஜேஎப் 17 விமானம்தான் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers