நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை: இம்ரான்கானின் ட்வீட்

Report Print Kabilan in தெற்காசியா

நோபல் பரிசு பெற தான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதிலிருந்தே அனைத்து தரப்பினரும் அவரை பாராட்டித் தள்ளினர்.

மேலும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற ஹேஷ்டெக்கும் ட்விட்டரில் டிரெண்டாகி வந்தது. இந்நிலையில், தான் நோபல் பரிசு பெற தகுதியானவன் இல்லை என பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களது விருப்பப்படி அமைதி மற்றும் துணைக் கண்டத்தில் வளர்ச்சியை யார் ஏற்படுத்துகிறார்களோ, அவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்