தொடரும் வேட்டை...தீவிரவாதிகளை கொன்று குவிக்கும் இந்தியா! பதற்றமான சூழ்நிலையில் எல்லை பகுதி

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவின் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் திகதி துணை இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலினா 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவம் இந்திய முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியது.

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஆனால் இதைப் பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் மீமந்தர் பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

பல மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

அதில் இரண்டு பேர் உடனடியாக இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரும் புல்வாமா தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நேற்று இந்தியா நடத்திய தாக்குதலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இரண்டு தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers