அரிய வகை குரங்கை கொன்று சமைத்த நபர்: சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் சிக்கினார்

Report Print Balamanuvelan in தெற்காசியா

பாதுகாக்கப்பட்ட அரிய வகை குரங்கினமான Rhesus monkey வகை குரங்கை கொன்று அதை சமைத்து சாப்பிட்டதோடு, அதை புகைப்படமும் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒருவர், விலங்குகள் நல அமைப்பு ஒன்றின் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேகாலயாவைச் சேர்ந்த Sengkud Sangma என்னும் நபர் Rhesus monkey என்னும் அரிய வகை குரங்கை கொன்று சமைத்து தின்றிருக்கிறார்.

Rhesus macaque monkey என்பது, வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972இன் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்கினமாகும்.

அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.

குரங்கை கொன்று சமைத்து தின்றுவிட்டு, அதை புகைப்படமும் எடுத்து Sangma சமூக ஊடகங்களில் பதிவேற்ற, பீட்டா அமைப்பினர் அதைப் பார்த்துவிட்டு பொலிசாரிடம் புகாரளித்தனர்.

பொலிசார் Sangmaவைக் கைது செய்து சிறையில் அடத்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers