அந்தமான் கடலில் சுற்றுலாப் பயணிகளை கதிகலங்க வைத்த அந்த காட்சி! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

அந்தமான் கடலில் ஏற்பட்ட நிகழ்வு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வித பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் இருக்கும் Koh Lipe என்ற தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்வார்கள். அதுவே விடுமுறை நாட்கள் என்றால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் வழக்கம் போல் அலை மோதியுள்ளது. ஆனால் அங்கு வந்த சுற்றுலாப்பயணிகளுக்கு கடலில் நடந்த நிகழ்வு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, திடீரென்று அன்றைய தினம் Koh Lipe தீவில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டது, அப்போது யாரும் எதிர்பாரத வகையில் கடலில் இருந்து சுமார் 10 முதல் 15 மீற்றர் உயரத்திற்கு கடலில் இருந்து நீர் சுழற்சிகள் எழும்பின.

கடலில் சற்று ஆக்ரோமாக அலை மேல் எழும்பி வந்தாலே, மக்கள் அலறி ஓடுவார்கள். ஆனால், நேற்றோ அந்தமான் கடலில் ஒரே இடத்தில் நான்கு நீர் சுழற்சிகள் உருவாகி அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்ததால், தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், மேகங்களில் இருந்து உருவாகும் சுழற்சி தண்ணீருடன் கலக்கும்போது நீர் சுழற்சியாக மாறுகிறது.

இது பேர் வெதர் மற்றும் டோர்னடிக் என இரண்டாக பிரிக்கப்படுகிறது. பேர் வெதர் மிகவும் பொதுவானது அவ்வப்போது ஆபத்தானது.

பல இடங்களில் அடிக்கடி தோன்றி மறையும். ஆனால், டோர்னடிக் என்ற நீர் சுழற்சி மிகவும் ஆபத்தானது. அதுபோன்ற நீர் சுழற்சி ஏற்பட்டால் அழிவு நிச்சயம்.

Koh Lipe தீவில் ஏற்பட்ட நீர் சுழற்சி பேர் வெதர் வகை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் திடீரென ஒரே இடத்தில் இத்தனை நீர் சுழற்சிகளைக் கண்டதும் அதிகாரிகளும் சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்துவிட்டனர். இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers