நான் பயங்கரவாதி.. பறக்கும் விமானத்தில் புகைப்படத்தை வெளியிட்ட இளைஞர்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

விமானத்தில் பயங்கரவாதி என தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட இளைஞரை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்த பாகுயிகாதி என்ற இளைஞர் முகத்தை மூடிக்கொண்டு புகைப்படம் எடுத்து விமானத்தில் பயங்கரவாதி என மிரட்டல் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

விமானத்தில் அவருடைய செயல்பாடுகளை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு பயணி விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தார். அவர்களும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இளைஞரை கைது செய்தனர்.

பின்னர் விசாரணையை மேற்கொண்ட போது அவருடைய நண்பர்களை ஏமாற்றுவதற்காக செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்ட போது, நான் தீவிரவாதியெல்லாம் கிடையாது. என்னுடைய நண்பர்களை ஏமாற்றவே அப்படி செய்தேன் என கெஞ்சியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் இளைஞருடைய பெற்றோர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். முழு விசாரணையை மேற்கொண்ட பின்னர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதித்தனர்.

இளைஞரால் விமானம் தாமதமானது மிகவும் துரதிஷ்டவசமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்