குப்பையில் கிடந்த பொருளை எடுத்து விளையாடிய குழந்தைகள்: அடுத்து நேர்ந்த பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமம் ஒன்றில் 3 குழந்தைகள் குப்பையில் கிடந்த பொருளை எடுத்து விளையாடி உள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் 3 குழந்தைகளும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் அறிந்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தைகள் விளையாடியது ராணுவத்தினர் பயன்படுத்தும் வெடிகுண்டு என்பது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் வெடிகுண்டு குப்பையில் எப்படி வந்தது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அளிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்