பொது இடத்தில் இப்படி செய்யாதே என கூறிய கர்ப்பிணி பெண் கொடூர கொலை: அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் ரயிலில் உடன் பயணித்த பயணி புகைப்பிடிப்பதை தட்டி கேட்ட கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சினத்தேவி என்ற கர்ப்பிணி பெண் தனது குடும்பத்தினருடன் பீகாருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரயிலில் அருகில் இருந்த சோனு என்ற நபர் புகைப்பிடித்துள்ளார்.

இதையடுத்து பொது இடத்தில் ஏன் புகைப்பிடிக்கிறாய் என சோனுவுடன் சினத்தேவி வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த சோனு சினத்தேவியின் கழுத்தை நெரிக்க அவர் மயங்கியுள்ளார்.

இதன்பின்னர் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் சினத்தேவியை உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் கொலையாளி சோனுவை கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்