தொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதி

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் ஒடிஷா மாகாணத்தில் வாக்குவாதத்தின் இடையே இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒடிஷா மாகாணத்தின் கோஞ்சுகரில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணமான யுவதி நெருங்கிய நண்பரான அந்த இளைஞருக்கு அளவுக்கு அதிகமாக மது அளித்து போதையில் இருந்தவரின் பிறப்புறுப்பை வெட்டி வீசியுள்ளார்.

புதனன்று இரவு யுவதியின் குடியிருப்பில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் ராஜேந்திர நாயிக் கட்டாக் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே குறித்த யுவதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞரும் அந்த யுவதியும் நெருங்கிய நண்பர்கள் என்பது பொலிசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

யுவதியின் அளவுகடந்த மொபைல் போன் பயன்பாடு குறித்து பலமுறை இளைஞர் எச்சரித்து வந்துள்ளார்.

மட்டுமின்றி தொலைபேசியில் தன்னை மட்டும் அழைத்து பேசினால் போதும் எனவும் இளைஞர் திருமணமான அந்த யுவதியை கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

ஆனால் இளைஞரின் கண்டிப்புக்கு அந்த யுவதி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் பணியாற்றி வந்த இளைஞரை சம்பவத்தன்று யுவதியின் குடியிருப்புக்கு வரவழைத்த நிலையில் மீண்டும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தமக்கு மது அளித்ததாகவும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த தம்மை கத்தியால் தாகியதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இளைஞரின் நிலை ஆபத்துகட்டத்தில் இருப்பினும் பயப்படும் அளவுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்