தாய் வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in தெற்காசியா

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த கொலையாளி பொலிசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்கண்ணன். இவர் மகள் சாரதா (46). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போன சாரதா பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அங்குள்ள வனப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்று பொலிசார் விசாரித்ததில் அது சாரதாவின் சடலம் என தெரியவந்தது.

அப்போது ரமேஷ் (24) என்பவருடன் சாரதா பலமுறை சுற்றி திரிந்ததாக ஊர் மக்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

இதன்பேரில் ரமேஷை பொலிசார் பிடித்து விசாரித்த போது சாரதாவை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார்.

ரமேஷ் அளித்த வாக்குமூலத்தில், நான் பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து விற்கும் வியாபாரம் செய்கிறேன்.

நான் தொழில் நிமித்தமாக சாரதா வசிக்கும் பகுதிக்கு சென்ற போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்து அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளேன்.

கடந்த 5-ஆம் திகதி காட்டு பகுதியில் சுற்றிதிரிந்த சாரதாவை சந்தித்து அவர் அணிந்திருந்த நகைகளை கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இதையடுத்து சாரதாவின் கழுத்தை சால்வையால் நெரித்து கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த நகையை எடுத்து கொண்டு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்