கிறிஸ்தவ பெண் மீதான வழக்கு: மோதிக்கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்... வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in தெற்காசியா

இறைதூஷணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகள் வரை சிறையிலிருந்த Asia Bibiயை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து பாகிஸ்தானில் கலவரம் வெடித்தது.

இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மோதிக்கொள்வதை அந்த வீடியோவில் காணலாம்.

வழக்கு முடிவடையும்வரை சிறையிலிருக்கும் Asia Bibiயை நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதில்லை என பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமியவாதிகளுடன் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தையடுத்து இந்த மோதல் வெடித்தது.

இதற்கிடையில் Asia Bibi இல்லாமல் தான் நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றும், ஆனால், தன் விருப்பத்திற்கு எதிராக தன்னை ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் பாகிஸ்தானை விட்டு வெளியேறச் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் Asia Bibiயின் வழக்கறிஞரான Saif-ul-Malook.

தற்போது ஹாலந்திலிருக்கும் அவர், Asia Bibiயை விட தனக்குதான் அதிக ஆபத்து இருப்பதாகக் கூறி தன்னை பாகிஸ்தானை விட்டு வெளியேற்றி விட்டதாகத் தெரிவிக்கிறார்.

இதற்கிடையில் பாரீஸ் மேயரான Anne Hidalgo, தான் Asia Bibiயை வரவேற்க தயாராக இருப்பதாகவும், பிரான்ஸ் அரசாங்கம் இஸ்லாமாபாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்