தேர்வில் நூற்றுக்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி!

Report Print Balamanuvelan in தெற்காசியா

96 வயதில் தேர்வெழுதி முதல் மாணவியாக வெற்றி பெற்றிருக்கிறார் கேரளாவைச்சேர்ந்த ஒரு பாட்டி.

கேரளாவில் நடத்தப்படும் Literacy Test எனப்படும் தேர்வில் நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருக்கும் அந்த பாட்டியின் பெயர் Karthayayani Amma.

அந்த தேர்வில் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதத் திறமைகள் சோதிக்கப்படும்.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 42,933 பேர் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கேரளாவில் இந்த தேர்வை எழுதியவர்களிலேயே Karthayayani Ammaதான் அதிக வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் படிக்க வேண்டிய வயதில் படிக்கவில்லை, இப்போதாவது எனக்கு படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்கிறார் அவர்.

இதற்கு பிறகு கம்ப்யூட்டர் படிக்க விரும்பும் Karthayayani Amma, ஓய்வு நேரங்களில் கணினியைப் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.

Karthayayani Ammaவின் ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் கேரள முதல்வர் உட்பட பல பிரபலங்கள் அவரை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்